ஜெயகாந்தன் பல வருடங்களுக்கு முன்னாள் எழுதிய அந்தக் கங்காவும் வசந்தியும் எங்கே போனார்கள். அவர்களை இந்தச் சமூகத்தில் இன்னும் தேடவேண்டியதாகத்தான் இருக்கிறது இந்தச் சமூகம். அக்கினி நட்சத்திரம்ல இருந்து, சில நேரம் சில மனிதர்கள் மூலமா, இந்தக் கங்கை எங்கே போகிறாள் வரைக்கும் ஒரு அருமையான பயணமாகத்தான் இருந்தது.

இந்தக் காலத்திலையும் இந்தக் கதைகள் மயிர் சிலிர்க்கிறமாதிரி தான் இருக்கிறது. கங்காவோட பக்குவமும், தன்னம்பிக்கையும், திமிரும், திடமான மனசும் படிக்கிறாப்போ எனக்கு நிறைய ஆனந்தத்தையும் மனதிருப்தியும் கொடுக்கிது. வசந்தாவும் மனசில் பதியிர மாதிரியான ஒரு கதாப்பாத்திரம். அவளோட பகுத்தறிவும், உயரிய கொள்கைகளும் இந்தக் காலகட்டத்திலையும் மக்களிடையே பார்க்கிறது கொஞ்சம் சிரமம்தான்.

வெகுளிதனத்திலயும், காமத்திலையும் தொடங்கின இந்த ஆண் பெண் உறவு கங்கை கரையில் ஆனந்தமான ஒரு சந்நியாசத்தில் முடிகிறது. இதற்கிடையில் மனதளவில் ஒரு வசந்தகாலம், வாழ்க்கை வெறுத்து மிதக்கிற காலம், குடும்பத்தோடு நிலையான பல வருடங்கள், மன துணைவனுக்கும், தேசாந்தரத்துக்கும் ஒரு காத்திருப்பு, இறுதியில் அந்தக் கங்கையோடு சுதந்திரமான ஒரு சந்நியாசம். இதுதான் இந்தக் கங்காவோட வாழ்க்கை. இந்த ஒவ்வொரு காலகட்டத்திலையும் அவளோட மனநிலையில் ஏற்படுற முதிர்ச்சியும் மாற்றங்களும் படிக்க நிறைய அருமையா இறுக்கு.

இந்தப் புத்தகத்தில் எனக்குத் தனியா விலகிப் பிரகாசமா தெரிந்தது முதிர்ந்த வயது கங்காவின் சிந்தனைகளும், முதிர்ந்த வயதில் வெங்கு மாமா எழுதின கடிதமும் தான். இதெல்லாம் காசி மேல ஒரு ஆசையா துண்டித்து. இந்திய சமூகத்தில எதற்குக் கடைசிக்கால தேசாந்தரம் போறாங்கன்னு சிந்திக்க வைக்கிறது. ஒருவேளை வாழ்க்கை முழுவதும் சுற்றி இருக்கிற சமூகத்தின் நெருக்கடியில் வாழ்ந்து, கடைசிகாலத்துல யாருக்கும் சுமைய இல்லாமலும் சுதந்திரமா வாழ உருவானதுதான் சந்நியாசமோ! இப்பி வாழ்க்கைக்கும் சந்நியாசத்துக்கும் நல்லாவே தொடர்பு இருக்குறத தோணுகிறது.

கடைசில அப்படி கங்கையில், இந்து மத சந்நியாசத்தில் என்னதான் இருக்குதுனு அனுபவித்து பார்க்க வேண்டும் ஒரு தூண்டலையும், தேடலையும் உருவாக்கி விட்டார் ஜெயகாந்தன்.