முதல் ஐஞ்சு நிமிசம் வந்த dance sequence பாத்தப்போ படம் அர்த்தமற்ற fantasyகுள்ள போய் ரொம்ப மொக்கையா போகப் போகுதுன்னுதான் நெனச்சேன். அதுக்கு அப்போறோம் தேவர் மகன் கமல் எப்படி படிப்படியா ஒரு முதிர்ச்சியான மனிதனா மாறுவாரோ அதே மாதிரி நானும் கொஞ்சம்கொஞ்சமா படத்துக்குள்ள மூழ்கிட்டேன்.

La La Land
Source: http://www.lalaland.movie/

Damien Chazelle 25 வயசுல எழுதின scriptனு சொல்றது நம்பமுடியாத அளவுக்கு பிரம்மிப்பா இருக்கு. அவருக்கு இருக்குற இசை புரிதலும் பிரமிப்பாதான் இருக்கு. Whiplash படத்திலையும் La La Land படத்துலையும் வர்ற இசைக்காகவே படத்த பலமுறை பாக்கலாம். La La Landல இருக்க Ryan Goslingக்கு Jazz இசைல இருக்கிற பற்றுலையும் அத அழிய விடாம காப்பாத்தணும்னு இருக்கிற எண்ணத்திலையும் Damien Chazelle பாக்க முடியுது.

ரொம்ப எதார்த்தமா , நகைச்சுவைக்கு குறைச்சல் இல்லாம , பின்னணி இசை இல்ல பாட்டு வந்தாலே மகிழ்ச்சி ஆகுற அளவுக்கு நல்ல இசையோட, மனசுல பதிகிறமாதிரி ஆழமான சில காட்சியோட எல்லாமே நல்லாயிருந்தது. இரண்டுமணி நேரம் ரெண்டுபேர மட்டுமே காட்டுனாலும் ரொம்ப சுலபமா நகர்ந்தது படம் (இரண்டாம் உலகம் ஞாபகம் இருக்க?). Ryan Gosling, Emma Stone இரண்டு பேரும் அந்த அளவுக்கு திறமைய நடிச்சிருந்தாங்க. இந்த படத்துல இருந்த Ryan Gosling மற்றும் Emma Stoneன பாத்து தமிழ் சினிமால இருக்க நடிகர்கள் நிறைய கத்துக்கலாம். அவங்களோட Variety of Talent வியத்தகு தான் இருக்குது. இவ்வளோ திறமையன நடிகர் நடிகைகள் தமிழ் சினிமால ரொம்ப சொற்பம். திறமைனா நடிக்கிறது மட்டும் இல்ல, அந்த அந்த தொழிற் கலைஞர்கள் போல dance ஆடுறதா இருக்கட்டும் இல்ல Piano வாசிக்கிறதா இருக்கட்டும் ரொம்ப யதார்த்தமா செஞ்சிருக்காங்க. இந்த படம் பாத்திட்டு Emma Stoneனோட மத்த படங்கள் பாக்கணும்னு தோனுது.

படத்துல இன்னும் ரெண்டு முக்கியமான விஷயம் ஒளிப்பதிவும் லைட்டிங்கும். சில ஷாட்ஸ் கொஞ்சம் blurryய இருக்கு. அது இயக்குனர் ஒரு காரணத்தோட வெச்ச மாதிரிதான் தோணும். ஆனா காரணம்தான் என்னனு தெரியாது. மத்தபடி லைட்டிங்லாம் தனியா தெரியும். தேவைக்கு ஏற்ப ரொம்ப நல்ல இருந்தது. படத்துல இருக்க எல்லா dance sequence எல்லாமே ஒன்னு இல்ல ரெண்டு ஷாட்ல எடுத்த மாதிரி இருந்தது. எப்படிடா எடுத்தாங்க, எப்படி நடிச்சாங்கனு நினைக்கிற மாதிரிதான் இருந்தது. படத்துல பல காட்சிகள் கேமரா கட் பண்ணாம ஒரு ஷாட்ல எடுத்திருக்காரு. Romance படமோ என்னவோ USல எடுத்த படம் Europe எடுத்த மாதிரியே இருக்கு.

மியூசிக்கல் படம்னா பொதுவா கொஞ்சம் ஆழ்ந்து யோசிச்சு சிரமப்பட்டு தான் எடுப்பாங்க. அது எப்போதுமே ஏமாத்துனது இல்ல என்ன. அதே மாதிரி இந்த படமும் ரொம்ப திருப்தியா பாக்கிறப்போ மனசுக்கு குளிர்ச்சியா இருந்தது.

தமிழ் சினிமா மாதிரி Hollywoodல எல்லா இயக்குனர்களும் படத்தை எழுதி இயக்குறது இல்ல. எழுதுறது ஒருத்தர் இயக்குறது ஒருதரா தான் இருப்பாங்க. Hollywoodல எழுதி இயக்குற இயக்குனர்களோட படம் எப்போதுமே ஒருபடி மேலதான் இருக்கும். அந்த வரிசைல இருக்க Damien Chezelle எதிர்காலத்துல மிக முக்கியமான இயக்குனர்கள் பட்டியல்ல ஒரு இடம் கண்டிப்பா இருக்கு. 32 வயசு மட்டுமே ஆனா அவர் ஒரு இயக்குனர் மட்டும் இல்ல. ஒரு film maker. ஒரு Auteurனு கூட எதிர்காலத்துல சொல்லப்படலாம் (பார்க்க Auteur Theory).